ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி

Join the forum, it's quick and easy

ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
ராம ராஜ்யம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup

லியோனார்டோ டாவின்சி ஒரு விஞ்ஞானி!

Go down

லியோனார்டோ டாவின்சி ஒரு விஞ்ஞானி! Empty லியோனார்டோ டாவின்சி ஒரு விஞ்ஞானி!

Post  santhoshkumar Sun Dec 05, 2010 8:35 pm





1452 முதல் 1519 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில்
வாழ்ந்த லியனார்டோ டாவின்சி என்ற இத்தாலிய ஒவியவர் உலகப் புகழ் பெற்ற
ஒவியமான மோனலிசாவை வரைந்தவர், அவரின் இன்னும் பிற ஒவியங்களும் பல அறிவியல்
கண்டுபிடிப்புகளுக்கு வழி கோலின என்பதும் தெரியும். இத்தாலிய ராணுவத்தில்
பணி புரிந்த அவர், பல ராணுவத் தளவாடங்களையும், அவற்றில் பல பேரழிவு
ஆயுதங்களாகவும் வரைந்திருந்தார்.

அந்த ஆயுதங்கள் வடிவமைக்கப்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை, அப்படிப்பட்ட
ஆயுதங்கள் இதுவரை கிடைக்கப்பெற்வில்லை. அந்த ஆயுதங்கள்
அழிக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் இவையெல்லாம் லியோனார்டோ பிறப்பிற்கு
முன்பே இந்த ஆயுதங்கள் உருவாக்கப் பட்டிருக்கவேண்டும் என்றும்
கணிக்கின்றனர். அதாவது சுமார் 1800 வருடங்களுக்கு முன்பே இந்த ஆயுதங்களை
பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒரு வேளை இதையெல்லாம் அப்போதே
வடிவமைத்திருந்தால், பயன்படுத்தியிருந்தால் அது மிகப்பெரிய பேரழிவை
விளைவித்திருக்கும் அல்லது விளைவித்திருக்க வேண்டும் என்பது சற்று
சங்கடத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை. அவரின் ராணுவ யுக்திகள் அன்றைய
ராணுவத்திற்கும் பயன்பட்டிருக்கின்றது, அவரின் வரைபட குறிப்புகளின்படி
ராணுவம் இயக்கப்பட்டிருக்கிறது என்பதை வரலாற்று குறிப்புகள்
தெரிவிக்கின்றன.

மிக சாந்தமான, மௌனப் புன்னகையை வெளிப்படுத்தும் வரைபடமான மோனலிசாவை
உருவாக்கிய டாவின்சி, மிக ஆபத்தான ஆயுதங்களையும் வடிமைத்திருந்தார்
என்பதும், இது அவரின், மனநிலையும் ஆராய்கின்ற சர்ச்சைகளையும்
உருவாக்கியது. அவரின் அமைதியான மனத்தின் அடியில் இந்த மூர்க்க குணமும்
மறைந்திருநதது என்ற வாதத்தை முன் வைப்பவர்களும் உண்டு. தன் குருவையும்
மிஞ்சிய சீடராகவும் இருந்தார் என அவரை வர்ணிப்பதுண்டு. இத்தனைக்கும் அவர்
காலத்தில் இம்மாதரி அறிவியல் கல்விகள் என்று தனியாக இல்லை.

இவரின் வரைபடங்களை ஆராய்வதற்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில்
ஏற்படுத்தபெற்ற லியோனார்டோ தொழிற்கூடம் (Leonardo Davinci's workshop) ,
அவரின் வரைபடங்களை கொண்டு அந்த கருவிகளை தயாரித்து ஆராய முற்பட்டது. அதன்
தலைவரான ஜோனாதன் பெவ்னர் (Dr.Jonathan Pevsner) தன் குழுவினருடன் சேர்ந்து
பல ராணுவ தளவாடங்களையும் தயாரித்து சோதனை செய்து உலகுக்கு
அறிமுகப்படுத்தினார்.

அதில் ஒன்று தான் 33 துப்பாக்கி குழல் கொண்ட பீரங்கி (இதை ஆர்கனன்ஸ்
மஸ்கட் மெசின் கன் என்றும் அழைப்பர்,33 barrel canon or 33 barrel machine
gun) இதை முக்கோண வடிவில் மூன்று அடுக்குகளாக, ஒரு அடுக்கிற்கு 11
துப்பாக்கி குழல்கள் (11 barrel) வீதம் வடிமைத்திருந்தார். இதை ஒவ்வொரு
முறை சுழற்றி 11 வெடிப்புகளை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்யும் வகையில்
இந்த வடிமைப்பு இருந்தது. லியோனார்டோவின் ஒவியத்தை அப்படியே கணிணி
தொழில்நுட்பத்தின் கீழ், இதன் அளவீடுகளை கணித்து, அந்த அளவீடுகளின் படி
பீரங்கியை இக்குழுவினர் புதிதாக, முழுவதுமாக வடிவமைத்தனர்.


இதில் பயன்படுத்துவதற்கான குண்டுகள் ஒவ்வொன்றும் இரண்டரை கிலோ எடை கொண்ட
குண்டுகளாக இருந்தது. வெடிக்கும் பொழுது பீரங்கி வண்டி பின்னோக்கி நகரும்
கணக்கையும் (Recoil velocity) துல்லியமாக கணக்கிட்டு வடிமைத்திருந்தனர்.
பீரங்கி ஒரு முறை வெடித்தவுடன், அந்த குழாய்களில் வெப்பம் அதிகமாக
இருக்கும். வெப்பமடைதலால் பொருள்களும் விரிவடையும் என்ற இயற்பியல்
கோட்பாட்டை கணக்கிட்டுத்தான் அவர் இந்த மூன்றடுக்கு முறையில், ஒரு பக்க
அடுக்கு வெடித்தவுடன் அடுத்த அடுக்கு பக்கத்தை சுழற்றி அதில் குண்டுகளை
நிரப்பி வெடிப்பதற்காக இந்த வடிவமைப்பை வரைந்திருப்பார் என அறிந்து கொள்ள
முடிகின்றது.


அதே போன்று
வெப்பமடைந்திருக்கும் குழலில் மீண்டும் வெடிமருந்து நிரப்பும் போது
தவறுதாலாக வெடிப்பதற்கான (misfire) வாய்ப்பு அதிகமிருப்பதை உணர்ந்து இந்த
மூன்றடுக்கு சுழற்சி (3 tires) முறையில் இதை எச்சரிக்கையாக அப்போதே
வரைபடத்தின் மூலம் வடிவமைத்திருக்கிறார் என்பது ஆச்சர்யமூட்டும்
விஷயமாகும்.சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இயற்பியல் யுக்தியை
கண்க்கிலெடுத்து கொண்டு வரைந்திருக்கிறார் என்பதை நம்மால் அறியமுடிகிறது.

இவர் வரைந்திருக்கும் ஒவியங்களை வைத்து காலத்தை கணக்கிடும் பொழுது சுமார்
கிபி 1482 ஆம் ஆண்டு வாக்கில் இது வரையப்பட்டிருக்கும் எனக்
கணக்கிடப்படுகின்றது. அப்போது அவருக்கு 30 வயதிருந்திருக்கலாம். அன்றைய
காலகட்டத்திலேயே விஞ்ஞானம் எந்தளவுக்கு வளர்ந்திருந்தது என்பதை அனைவராலும்
கணிக்க முடிகின்றது. ஆனால் இவைகள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு,
இன்னும் அவர் காலத்துக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளின் மாதிரிகளை
வைத்து வரைந்த வரைபடங்கள் தான் என்று கூறும் போது இன்னும் அதிக ஆச்சர்யமே
ஏற்படுகின்றது.

லியானார்டோ வரைந்த இதர கருவிகளின் ஒவியங்கள்
இந்த ஆயுத வரைபடத்தை கொண்டு இன்றைய காலகட்டத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த
பீரங்கியை சோதனை செய்த போது, அது கணகச்சிதமாக வேலை செய்ததது. சரியான
இலக்குகளை துல்லியமாக, பலமுடன் 11 குண்டுகளும் சென்று தாக்கியது. இதன்
மூலம் அது மிகப்பெரிய பேரழிவு ஆயுதம் எனபதையும் நிருபித்தது. இதன்
பின்னோக்கி நகரும் விசையையும் (Recoil velocity) அதிகளவில் இல்லாமல்
இருந்தது.

இன்றையளவில் அந்த பீரங்கியை பயன்படுத்தினாலும் பேராபத்துதான், இதன்மூலம்
ஒரு அமைதியானவரிடத்தில் பேராபத்தான விஷயங்களும் மறைந்திருக்கும்
என்பதனையும், பல அரிய கண்டுபிடிப்புக்கான தாக்கங்களும் இருக்கும் என்ற
உண்மையும் வெளிப்படுகின்றது. (ஆகையால் தான் சாதுமிரண்டால்...காடு கொள்ளாது
எனக் கூறுகின்றார்களோ?) எது எப்படியிருந்தாலும் பல்கலைக்கழகங்கள் இல்லாத
காலத்தில், அது என்ன என்று தெரியாத காலத்தவரான டாவின்சி வரைந்த வரைபடங்கள்
இன்றைய பல்கலைக்கழகங்களின் அறிவியல் வளர்ச்சிக்கும், பி.டெக், பி.இ
பட்டதாரிகளுக்கும், முனைவர்களுக்கும், அவர்களின் ஆய்வுகளுக்கும் இந்த
வரைபடங்கள் துணை புரிகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. ஏன்? இன்றைய
ராணுவத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுகின்றது.















santhoshkumar
santhoshkumar

பதிவுகள் : 589
சேர்ந்தது : 02/12/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum